தமிழகத்தில் இருந்து கொள்ளை போன சிலை: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழக கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 60 செ.மீ. உயரம் கொண்ட திருமங்கை ஆழ்வார் வெண்கல சிலை ஒன்று இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் உள்ளது. 

16-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலையை பெறுவதற்கு இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்தது. இந்த பேச்சுவார்த்தையின் பலனாக இந்த சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தற்போது ஒப்புதல் அளித்து இருக்கிறது. 

தற்போது பல்கலைக்கழக அறக்கட்டளை கமிஷனின் ஒப்புதல் கோரப்பட்டு உள்ளது. இந்த கமிஷனின் ஒப்புதல் கிடைத்தவுடன் 500 ஆண்டு பழமை வாய்ந்த இந்த வெண்கல சிலை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்.

Related Posts