ஆட்டோகாரனிடம் சண்டை! ஒருத்தர்விடாமல் வம்பு செய்யும் நயன்தாரா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை நயன்தாரா கோலிவுட்டில் முன்னணி ஹீரோயின் படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்குகிறார். கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு, பாலிவுட் என இவர் தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டி பறக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகள் உடன் வெளிநாடுகளுக்கு ட்ரிப் சென்று வருகிறார் நயன்தாரா. நடிகை நயன்தாரா சென்னை எக்மோர் பகுதியில் இருக்கும் ஒரு பெரிய அபார்ட்மெண்டில் தான் வசித்து வருகிறார். மாலை நேரங்களில் குழந்தைகளை அழைத்து வந்து கீழே விளையாட விடுகிறாராம். அந்த புகைப்படங்களை தான் இணையத்தில் அவரது கணவர் பகிர்ந்து வருகிறார். 

அந்த நேரத்தில் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் முனைப்பில், எதாவது சின்ன விஷயம் நடந்தாலும் மற்றவர்களிடம் சண்டை போடுகிறாராம். அபார்ட்மெண்ட் உள்ளே ஒரு ஆட்டோ ஓட்டுநர் வேகமாக வந்தார் என கூறி அவருடன் சண்டை போட்டிருக்கிறாராம் நயன்தாரா. இது போல ஏராளாமானவர்கள் உடன் சண்டை போட்டிருக்கிறாராம். அது பற்றி அபார்ட்மெண்ட் கூட்டமைப்பில் இருந்து எக்கச்சக்க புகார்கள் வந்திருக்கிறதாம். குழந்தைகளுக்காக பலருடன் வம்பு சண்டைகளில் ஈடுபடுகிறார் நயன்தாரா. ஏழை எளிய அம்மாக்கள் குழந்தை வளர்ப்பில் இப்படியா சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது பொதுவான கேள்வி.

Related Posts
©   Thedipaar

முட்டைக்கு VAT வரி

©   Thedipaar

RBI-யின் புதிய ரூல்ஸ்!