இரசாயன நச்சு வாயுவை சுவாசித்த 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இரசாயன நச்சு வாயுவை சுவாசித்த 30 பேர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை – நல்லுருவ பிரதேசத்தில் உள்ள அழகுசாதன உற்பத்திற தொழிற்சாலை ஒன்றிலேயே  இந்த சம்பவம் இடம்பெற்றள்ளது.

அழகுசாதன உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில், பொருட்களுக்கான கலவைகளை மேற்கொள்ளும் போதே இந்த இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (P)


Related Posts
©   Thedipaar

முட்டைக்கு VAT வரி

©   Thedipaar

RBI-யின் புதிய ரூல்ஸ்!