இறந்துவிட்டதாக கூறப்படும் இலங்கை அகதி: கோர்ட்டில் மனு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இறந்துவிட்டதாக கூறப்படும் இலங்கை அகதி ஒருவர், உயிருடன் இருப்பதாகவும் அவரை திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் இருந்து மதுரை முகாமுக்கு மாற்றுமாறும் சென்னை மேல்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது

காந்தன் என்ற கே. கிருஸ்ணக்குமார், இறந்துவிட்டதாகவும் எனவே அவர் இந்தியாவில் நிரந்தரமாக தங்கியிருக்க அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையகம் அறிவித்திருந்தது.

எனினும் கிருஸ்ணக்குமார் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் அவரை திருச்சி முகாமில் இருந்து மதுரை முகாமுக்கு மாற்றவேண்டும் என்றும் அவரின் மாமியார் சென்னை மேல்நீதிமன்றில் மேன்முறையீட்டை செய்துள்ளார்.

தனது மருமகன் உயிருடன் இருப்பதாக மனுதாரர் வலியுறுத்தியுள்ளார் தாமே ஆணையாளரிடம் இருந்து தகவல்தொடர்புகளைப் பெற்றதாகக் கூறிய மனுதாரர், அதிகாரிகள் உண்மைகளை சரியாக சரிபார்க்கத் தவறிவிட்டனர் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

 எனவே தமது மருமகனை திருச்சியில் இருந்து மதுரை சிறப்பு முகாமுக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts