ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மும்பையில் உள்ள மலாடில் வசித்து வருபவர் மருத்துவர் ஒர்லெம் பிரெண்டன் செர்ராவ் (27). அவர் ஆன்லைன் ஆர்டர் மூலம் பட்டர்ஸ்காட்ச் கோன் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார்.

அவர் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் வந்ததுடன் அந்த பேக்கைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது ஐஸ்கிரீமுக்குள் மனித விரல் கிடந்தது. இதைக்கண்டு செர்ராவ் அதிர்ச்சியடைந்தார்.

அந்த ஐஸ்கிரீமை எடுத்து கொண்டு மலாட் போலீஸ் நிலையம் சென்ற பிரெண்டன் செர்ராவ், இதுகுறித்து புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் மனித விரல் கண்டெடுக்கப்பட்ட ஐஸ்கிரீம் வந்த கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். 

ஐஸ்கிரீமில் கண்டெடுக்கப்பட்ட மனித விரலை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். ஐஸ்கிரீமில் கிடந்த மனித விரலின் பகுதி தோராயமாக 1.5 செ.மீ இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்ட இடத்தை போலீசார் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Related Posts