ரொறன்ரோவில் 3 தமிழர்கள் பலியான விபத்து: விசாரணைக்கு மறுக்கும் பொலிசார்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நெடுஞ்சாலை 401ல் நிகழ்ந்த மூன்று தமிழர்கள் பலியான விபத்து குறித்து சிறப்பு புலனாய்வாளர்களிடம் பேச இரண்டு காவல்துறையினர் மறுத்து வருகின்றனர்.

ஏப்ரல் 29ல் நெடுஞ்சாலை 401 இல் தவறான பாதையில் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகினர்.

இந்த விபத்து குறித்து ஒன்ராறியோ மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கின்றது. 

ஆனாலும் இந்த விபத்துடன் தொடர்புடைய இரண்டு காவல்துறையினரும் புலனாய்வாளர்களுடன் நேர்காணலுக்கு மறுத்துள்ளனர். 

அதேவேளை சம்பவ தினம் குறித்த தமது குறிப்புகளை புலனாய்வாளர்களிடம் கையளிக்கவும் அவர்கள் மறுத்து வருகின்றனர்.

இது அவர்களின் சட்ட உரிமை என்பது குறிப்பிடத்தக்கது. புதன்கிழமை (12) வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் SIU இந்த தகவலை வெளியிட்டது.

இந்த விபத்தை Durham பிராந்திய காவல்துறை கையாண்ட முறை குறித்து ஏழு புலனாய்வாளர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக SIU கூறுகிறது.

இந்த விபத்து குறித்த விசாரணைகள் தொடர்வதாகவும் SIU தெரிவித்தது. இதில் 19 சாட்சி அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Posts