வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட இலங்கை அணி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்கா – புஃலோரிடா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில், வெள்ளப் பெருக்கு காரணமாக இலங்கை அணிக்கு புஃலோரிடாவை விட்டு வெளியேற முடியவில்லை என அறிய முடிகின்றது.

புஃலோரிடா ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை காரணமாக பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், இலங்கை அணி நாளை (14) மேற்கிந்திய தீவுகளை நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்றில் போட்டியிடும் இறுதி போட்டி நெதர்லாந்து அணிக்கு எதிராக 17ம் திகதி மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. (P)


Related Posts