நடிகர் பிரபாஸ் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க அதுவே காரணம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் பிரபாஸ் தற்போது ஒரு pan இந்தியா நடிகராக வலம் வருகிறார். பாகுபலி ஹிட் ஆன பிறகு அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அவை எல்லாம் வெற்றி வாகை சூடுகிறதா என்றால் இல்லை என்பதே உண்மை. ஏனெனில் பாகுபலி படத்திற்கு பின்னர் இவர் நடித்த படங்கள் எல்லாமே தோல்வி தான். ஒரு படம் கூட சொல்லிக்கொள்ளும்படி வெற்றி அடையவில்லை. பாலிவுட் வரை நடித்தால் கூட எதுவுமே வசூல் சாதனை படைக்கவில்லை. அடுத்து பிரபாஸ் கல்கி 2898 AD என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் சுமார் 800 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பிரபாஸ் 44 வயதாகும் நிலையில் இதுவரை ஏன் திருமணம் செய்யவில்லை என பாகுபலி இயக்குனர் ராஜமௌலியிடம் கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. 

அதற்கு அவர் சொன்ன பதில் வைரல் ஆகி இருக்கிறது. பிரபாஸ் ஒரு சோம்பேறி. ஒரு பெண்ணை கண்டுபிடித்து, அவரது பெற்றோரிடம் சென்று பேசுவது அவருக்கு கஷ்டமாக இருக்கும். அதனால் தான் இன்னும் திருமணம் செய்யவிலை என நினைக்கிறேன் என ராஜமவுலி கூறி இருக்கிறார். என்னதான் இந்த பதில் காமெடியாக பார்க்கப்பட்டாலும் இதில் உண்மை இருப்பது போல் தான் தெரிகிறது. ஏனெனில் பல பொது நிகழ்ச்சிகளில் பிரபாஸை மேடையில் பார்க்கும்போது, மிகவும் தாமதமாகவே வருவார். அதுமட்டுமின்றி இவர் சோம்பேறி என்று ஒரு இயக்குனர் சொல்லும்போது அவர் பிரபாஸை வைத்து எப்படி வேலை வாங்கி இருப்பார் என்பது தான் பெரிய கேள்விக்குறி!

Related Posts