49 பேர் உயிரை காவு வாங்கிய குவைத் தீ விபத்துக்கு மின் கசிவே காரணம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 45 இந்தியர்கள் உள்பட 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

அந்த கட்டிடத்தில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்துதான் இந்த துயருக்கு காரணம் என முதலில் தெரிவிக்கப்பட்டது. 

எனினும் விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து தீயணைப்பு துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரும் விசாரணை நடத்தினர்.

இதில், கட்டிடத்தில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என தீயணைப்பு துறையினர் நேற்று தெரிவித்து உள்ளனர். 

அந்த கட்டிடத்தை ஆய்வு செய்தும், களத்தில் பரிசோதனை செய்தும் கிடைத்த தகவல்களின் படி இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தீயணைப்பு துறையினர் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளனர்.

Related Posts