மக்களுக்கு என்னை பிடிக்கவில்லை, அந்த சீரியலில் நடித்தது அவமானம் - பிரபலம் ஓபன்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருந்தது. 9 மணி ஆனாலே போதும் பலரும் இந்த சீரியலை போட்டு உட்கார்ந்து விடுவார்கள். இந்த சீரியலின் முக்கிய வெற்றிக்கு காரணமாக இருந்தது மாரிமுத்து தான். அவர் பெண்களை பேசிய ஏய் இந்தாம்மா வசனம் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது. ஒரு ஊரில் பெண்களை தரக்குறைவாக எடைபோட்டு பேசும் மனிதர் எப்படி இருப்பாரோ அப்படித்தான் அவரும் அந்த சீரியலில் நடித்தார். அவரை பார்த்தாலே நடுங்கும் தோரணையில் தான் அவரது நடிப்பு இருக்கும். மாரிமுத்துவின் மறைவுக்கு பின்னர் அந்த ரோலில், வேல ராமமூர்த்தி நடித்திருந்தார். ஆனால் அவரின் நடிப்பு மாரிமுத்து அளவுக்கு இல்லை என்பது தான் பலரது விமர்சனமாக இருந்தது. 

காரணம் வேலவ மூர்த்தி நிறைய படங்களில் நடித்து கொண்டு சீரியலில் நடித்தது. அடுத்து மாரிமுத்து இருந்த இடத்தில் இவரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வேல ராமமூர்த்தி, சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் டிஆர்பியில் உச்சத்தில் இருந்த சீரியல் எதிர்நீச்சல் தான். ஆனால் இந்த சீரியலில் ஏன் நடித்தோம் என்று தான் இருந்தது. மிகப்பெரிய அவமானமாகவே நான் பார்க்கிறேன். ஏன் என்றால் ரசிகர்களுக்கு என்னை பிடிக்கவே இல்லை என்று வேல ராமமூர்த்தி கூறியுள்ளார்.

Related Posts