தன் மகனை அடித்த விஜய் சேதுபதி! பேட்டியில் ஓபன் டாக்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. விளம்பரம், படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் என தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வருகிறார். இவர் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் மகாராஜா. மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் இப்படம் முதல் நாளே மிகப்பெரிய வசூலை செய்துள்ளது.பல இடங்களில் இது குறித்து பேட்டி கொடுத்து வந்த விஜய் சேதுபதி கூறியது, தான் துபாயில் பட்ட கஷ்டங்களை கூறிய காணொளி இணையத்தில் வைரலானது.

\ துபாய் போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள் அந்த காணொளிக்கு ஆதரவும் தெரிவித்தார்கள். இந்த நிலையில் இவர் தன்னுடைய மகன் குறித்து பேசியது, என் மகன் எடுக்கும் சில முடிவுகளுக்கு எதிரான கருத்துக்களை நான் கூறியிருக்கிறேன். சில நேரங்களில் திட்டி இருக்கிறேன். சில சமயங்களில் அடித்து இருக்கிறேன். அடித்ததும் மன்னிப்பு கேட்டுள்ளேன் என கூறியுள்ளார் விஜய் சேதுபதி. இவரது மகன் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts