மறுபடியுமா? பரவும் வினோத நோய்! வந்தால் இரண்டே நாளில் இறப்பு நிச்சயம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜப்பானில் எஸ்.டி.எஸ்.எஸ். எனப்படும் ஸ்டிரெப்டோகாக்கல் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் என்ற இந்த வகை நோய் தொற்றால் இதுவரை மொத்தம் 977 பேருக்கு பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நோயானது, உடல் பகுதியை சாப்பிட கூடிய பாக்டீரியாவால் ஏற்பட கூடியது. மனிதர்களை 48 மணி நேரத்தில் கொல்லும் சக்தி படைத்தது. இந்த நோயானது ஜப்பானில் பரவி வருகிறது. இதன் பாதிப்பால், வீக்கம் மற்றும் தொண்டையில் வலி ஏற்படும். சில பேருக்கு, காலில் வலி, வீக்கம், காய்ச்சல் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்ட அறிகுறிகள் விரைவாக ஏற்படும். சுவாச பாதிப்பு, உடல் உறுப்புகள் செயலிழப்பு மற்றும் மரணம் ஆகியவை ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்த நோய் வந்தால் 2 நாட்களில் அவர்கள் உயிரிழந்து விடுவார்கள்.ஜப்பானில் இந்த விகிதத்தில் பரவி வரும் தொற்றுகளால், நடப்பு ஆண்டில் பாதிப்பு எண்ணிக்கை 2,500 ஆக அதிகரிக்க கூடும்.

சிறுவர்களிடையே பரவும் இன்ஃபுளுவென்சா | Thedipaar News

Related Posts