மனிதர்களின் தசையை தின்று 48 மணி நேரத்தில் அலையே கொள்ளும் புதிய வகை பாக்டீரியா ஜப்பானில் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று உலகை அச்சுறுத்திய நிலையில் தற்போது இந்த ஜப்பான் பாக்டீரியா பொதுமக்களிடையே பெறும் பீதியை கிளப்பியுள்ளது.
ஸ்டெப்டோ கார்க்கில் டாக்ஸிக் சோக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த புதிய நோய் மனிதர்களை தாக்கியதும் அவர்களின் தசைகளை தின்ன தொடங்கி பாதிக்கப்பட்ட நபர்களின் உயிரை பறித்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காய்ச்சல் கடும் உடல் சோர்வு, மூட்டுவலி, தொண்டைவலி, மூச்சு திணறல், வீக்கம் போன்றவை இவற்றின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் என்றும் பின்னர் திசு மற்றும் உறுப்பு செயலிழப்பு ஏற்பட்டு மரணம் நிகழும் என்றும் டோக்கியோ மருத்துவ பல்கலை கழகம் தெரிவித்துள்ளது. இந்த பாக்டீரியா தாக்கி 48 மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட நோயாளி உயிரிழப்பர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ப்பானில் கொரோனா காலத்தில் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவை போன்று இது மிக வேகமாக பரவாது என்றாலும் இந்த புதிய பாக்டீரியா உலக நாடுகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.