20 மாதக் குழந்தைக்கு சிகரெட், மது புகட்டிய தாய்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அசாம் மாநிலம், சில்சாரில் உள்ள செங்குரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 20 மாத குழந்தையை சிகரெட் புகைக்கவும், மது குடிக்கவும் வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்கள் வைரலானதைக் கண்ட சைல்டு லைன் அதிகாரிகள், போலீஸில் புகார் அளித்தனர். இதன் பேரில் அந்த குடியிருப்பை போலீஸார் சோதனை செய்து குழந்தையை மீட்டனர். அத்துடன் அக்குழந்தையின் தாயை விசாரணைக்காக காவலில் எடுத்தனர்.

தாயும், குழந்தையும் தற்போது குழந்தைகள் நலக் குழுவின் பாதுகாப்பில் இருப்பதாகவும், விரிவான விசாரணைக்காக ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதற்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

https://twitter.com/i/status/1802647016352186634

Related Posts