அசைவ உணவில் கிடந்த பல்லி... கன்னியாகுமரியில் அதிர்ச்சி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த அய்யூப் கான் என்பவர், அதே பகுதியில் பதிரியா என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இங்கு நேற்று இரவு போலீஸ்காரர் ஒருவர் வாங்கிய பீஃப் ஃபிரையில், பல்லி ஒன்று கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாப்பிட பார்சலை பிரித்தபோது அதில் இறைச்சியுடன் வால் முறிந்த நிலையில் இறந்த பல்லி ஒன்றும் இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் உணவகத்தில் இருந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு, அங்கிருந்த உணவு வகைகளை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து பரிசோதனைக்காக மாதிரிகளையும் அவர்கள் எடுத்துச் சென்றனர்.


Related Posts