Font size:
Print
கொரோனா காலத்தில் தகனமா
அல்லது அடக்கமா என்ற பிரச்சினை தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் உலகின் பிற நாடுகளால் உலகளாவிய விதிமுறைகள், நடவடிக்கைகள் மற்றும் உலக ஒருமித்த கருத்துகள் நிலவி வந்தபோதிலும் அதன் அடிப்படைகளில் முன்னோக்கி செல்லாது, தேசிய ரீதியாக நிபுணர் குழுவொன்றை நியமித்து அவர்களின் பரிந்துரை என்ற பெயரில் செயற்பட்டு, முஸ்லிம் மக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அடக்கமா தகனமா என்ற விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(18) பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
இறுதியில், கோட்டாபய ராஜபக்க்ஷ ஜனாதிபதியின் அரசாங்கத்தில் முஸ்லிம் மக்களையும், இஸ்லாமிய மதத்தையும் குறிவைத்து தீவிர இனவாத மற்றும் தீவிர மதவாத நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன.
அவர்களின் கலாசார மற்றும் மத அடையாளங்களை அழிக்க வலுவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதன் நீட்சியாகவே உலக சுகாதார ஸ்தாபனம் கூட வேண்டாம் என்று கூறிய போதும், கேவலமான செயலில் ஈடுபட்டனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். (P)
Related Posts