கனடாவில் வாழும் தமிழ் மக்களின் நீண்ட நாள் கனவுகளில் ஒன்றாக தமிழ் சமூக அமையத்தின் கட்டுமானப் பணிகள் விலைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. மூன்று நிலை அரசுகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழ் சமூக மைய கட்டுமானத்தில் தமிழ் சமூகமாக நாம் எமது பங்களிப்பினை வழங்குவதற்கான காலம் உருவாகியுள்ளது.
விழுதுகளாக அடையாளப்படுத்தப்படும் நிறுவுனர் குடும்பங்களிடம் இருந்து முதல் கட்ட நன்கொடைகளை பெற்றுக்கொள்ள தமிழ் சமூக மையம் திட்டமிட்டுள்ளது. இதில் இணையும் குடும்பங்கள் ஒவ்வொன்றும் தமிழ் சமூக மையத்தை உருவாக்குவதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 டொலரை வழங்க முடியும். இந்த நன்கொடையளிப்பின் மூலமாக 2,500 குடும்பங்களை இணைத்து அதன் மூலமாக 25,000,000 டொலரை பெற்றுக் கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதிப்பங்களிப்பின் மூலம் தமிழ் சமூக மையத்தின் அரங்க நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கனடாவில் உருவாகவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் சமூக மையத்தின் நிறுவுனர் குடும்பங்களில் ஒன்றாக நீங்கள் மாறுவதற்கு விரும்பினால் இந்த இணைப்பின் மூலமாக பதிவினை மேற்கொள்ள முடியும். தலைமுறைகள் தாண்டியும் கனேடிய மண்ணில் தமிழ் மக்களின் பெருமைக்குரிய அடையாளமாக திகழப் போகும் தமிழ் சமூக மையத்தினை வெற்றிகரமாக கட்டி முடிப்பதற்கு உங்கள் அனைவரினதும் பங்களிப்பு இன்றியமையாதது.
இந்த தகவலை உங்கள் உறவினர்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொளவதன் மூலம் அவர்களையும் இந்த திட்டதில் இணைத்துக் கொள்ளுங்கள்.
இந்த திட்டம் குறித்து உங்கள் சமூக ஊடகங்கள் மூலமாகவும் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்த இலக்கினை நாம் விரைவில் உட்டுவதற்கு உதவுமாறு தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம்.
நிதியுதவி அளிக்க இங்கே
கிளிக் செய்யவும்
நெல் கொள்வனவுக்காக வங்கிக் கடன் | Thedipaar News