இஸ்ரேலின் எந்த இடமும் விட்டுவைக்கப்பட மாட்டாது: ஹிஸ்புல்லா எச்சரிக்கை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


ஹிஸ்புல்லாவுக்கு எதிராக போரைத் தொடுத்தால் இஸ்ரேலின் எந்த இடமும் விட்டுவைக்கப்பட மாட்டாது என்று எச்சரித்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேலுக்கு விமான நிலையத்தை வழங்கினால் சைப்ரஸ் நாடும் இலக்கு வைக்கப்படும் என்று கண்டித்தார்.

‘நாம் மோசமான நிலைக்கு தயாராகி வருகிறோம் என்பது எதிரிக்குத் தெரியும் என்பதோடு எமது ரொக்கெட்டுகள் எந்த இடத்தையும் விட்டு வைக்காது’ என்று கடந்த புதன்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றிய நஸ்ரல்லா குறிப்பிட்டார்.

இஸ்ரேல் எம்மை நிலம், கடல் மற்றும் வான் மார்க்கமாக எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

லெபனானில் முழு அளவில் போர் ஒன்றை நெருங்கி இருப்பதாக இஸ்ரேல் அறிவித்த நிலையிலேயே நஸ்ரல்லாவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்ல அமைப்பு பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வருவதோடு அண்மைய நாட்களில் பதற்றம் தீவிரம் அடைந்துள்ளது. (P)

மன்னார் பிரதான சோதனைச் சாவடி அகற்றல் | Thedipaar News

Related Posts