வட இந்தியாவில் வெப்ப அலையின் எதிரொலி | Thedipaar News

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது.

குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது.

இதற்கமைய பல இடங்களில் இயல்பு நிலையை விட 5  - 8 பாகை செல்சியஸ் அதிக வெப்பம் பதிவாகி உள்ளது.
 
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கத்தால் சுமார் 114 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  


Related Posts