உறுமய வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவையொன்றை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி அலுவலகம் தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 30 திகதி வரை குறித்த நடமாடும் சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது காணி உறுதிகளை மக்களுக்கு வழங்குதற்காக சகல அதிகாரிகளும் நடமாடும் சேவையில் பங்கெடுப்பார்கள் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி காணி உறுதிகளை வழங்குவதற்கான சகல துறைசார் அதிகாரிகளையும் கிராமங்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக விரைவாக காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் சந்திரா ஹேரத் தெரிவித்துள்ளார்.
காணி உறுதியை பெற்றுக்கொள்ள வருகைத்தருவோர் அவர்களின் பழைய உறுதிகள் அல்லது அனுமதி பத்திரங்களை அதிகாரிகளிடத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இந்த நடமாடும் சேவையில் பதிவாளர் திணைக்களம், நில அளவையியல் திணைக்களம், பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொள்வர்.
இதற்காக எந்தவொரு வகையிலும் நிதி அறவிடப்படாது என ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் சந்திரா ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Font size:
Print
Related Posts