Font size:
Print
ஐரோப்பிய நாடுகள் பலவும் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வாகும் என்ற முடிவை முன்மொழிந்து வருகின்றன.
இந்நிலையில், ஆசிய நாடான ஆர்மீனியா பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான மோதலை தீர்க்க பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதே தீர்வாகும் என ஆர்மீனியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அயர்லாந்து, ஸ்பெயின், நோர்வே ஆகியவை பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. (P)
நெடுந்தீவில் இளைஞருக்கு நீதி கோரி பொலிஸ் நிலையத்தை முற்றுகை | Thedipaar NewsRelated Posts