பறவைக் காய்ச்சல் தொடர்பில் இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பறவைக் காய்ச்சல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


இந்தியா போன்ற அயல் நாடுகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.


பறவைக் காய்ச்சல் இன்ப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படுகிறது. இது முதலில் பறவைகளை பாதிக்கிறது, பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவை அல்லது விலங்குகளுடன் மனிதர்கள் தொடர்புகளை பேணினால் இந்த வைரஸ் மனிதர்களையும் தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில், இன்ப்ளூயன்ஸா ஏ வைரஸால் பாதிக்கப்பட்ட சிறுமி இந்தியாவில் அடையாளம் காணப்பட்டார். (P)

சீனாவில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு : 47 பேர் மரணம் | Thedipaar News

Related Posts