எனக்கு அப்படித்தான் பொண்டாட்டி வேண்டும் - சிம்பு போட்ட கண்டிஷன்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார். தற்போது இவர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போனவர் இப்போது மீண்டும் மாஸாக களம் இறங்கியுள்ளார். அதுவும் இப்போது இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே மாஸ் ஹிட்டாகி விடுகிறது. சமீபகாலமாக சிம்பு, வாரிசு நடிகை திருமணம் செய்கிறார் என்றும், தொழில் அதிபரின் மகளுடன் திருமணம் என்றும் தகவல் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த செய்திகள் எதுவும் உண்மை இல்லை. இந்நிலையில் நடிகர் சிம்பு, சில வருடங்களுக்கு தனது வருங்கால மனைவி பற்றி பேசியிருப்பார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அதில் அவர், எனக்கு காஃபி போட்டுக்கொடுக்கவோ, சமைத்து தரவோ பெண் தேவையில்லை. அதற்கு பணியாட்கள் இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை எனக்கு டாமினேட் செய்யும் பெண் தேவை. அந்த பெண் சொல்லும் பேச்சை கேட்டு நான் நடக்க வேண்டும் அப்படிப்பட்ட பெண் தான் எனக்கு வேண்டும் என கூறியுள்ளார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Related Posts