மூடிட்டு போடா என்று கூட சொல்வேன்! கமல் மகளின் அதிரடி பதில்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழில் இவருக்கு போதிய வரவேற்பு இல்லாவிட்டாலும் கூட தெலுங்கு சினிமாவில் முன்னணியில் தான் உள்ளார். ஸ்ருதி ஹாசன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.சமீபத்தில் Ask Me Anything என்ற பெயரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ஸ்ருதி ஹாசனும் பதிலளித்து வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர், தென்னிந்திய மொழியில் ஏதாவது ஒன்றை கூறுங்கள் என்று கேட்டார். இதற்கு அவர், இனவாதம் பார்வை என்பது சரி இல்லை. தென்னிந்திய மக்களை பார்த்து இட்லி, தோசை, சாம்பார் எனக்கூறுவது சரியில்லை. நீங்கள் எங்களை சரியாக புரிந்துகொள்ளவில்லை. இது தொடரும் பட்சத்தில் மூடிட்டு போடா என்று தென்னிந்திய மொழியில் சொல்லுவேன் என்று ரிப்லை செய்துள்ளார். இவரது பதிலுக்கு பாராட்டு குவிந்து வந்தாலும், ஒருபக்கம் எதற்கு இதெல்லாம் என்றவாறு பார்க்கப்படுகிறது. இணையத்தில் ஏதாவது பேச வேண்டியது பிறகு ரசிகர்கள் அப்படி சொல்கிறார்கள் இப்படி சொல்கிறார்கள் என குறை கூறுவது என சில நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Posts