பரிஸ் கிளப் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடனான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான உடன்படிக்கைகள் நாளை (26) கைச்சாத்திடப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கு நிதி வழங்கும் நாடுகளின் குறுகியகால கடன் மற்றும் நீண்டகாலக் கடன் போன்ற விடயங்களில் அவதானம் செலுத்திவரும் பரிஸ் கிளப் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதிப் பங்காளர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் தொடர்ச்சியாக பேச்சு நடத்தியிருந்தது.
குறிப்பாக ஏற்கனவே பெற்றுக் கொண்ட கடன்களை மறுசீரமைப்பது உள்ளிட்ட விடயங்களில் நீண்ட விரிவான உரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் இலங்கையின் தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்பவும் 2022ஆம் ஆண்டில் இருந்ததை விடவும் தற்போது பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற அடிப்படையிலும் நிதியுதவிகளை வழங்க திட்டமிட்டிருப்பதாக தெரிய வருகின்றது. (P)