விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷ செயற்படுவதைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை மேலும் நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (25) உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான லசந்த அழகியவண்ணவினால் விஜயதாச ராஜபக்ஷக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிமன்றினால் கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 9 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார். (P)


Related Posts