கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் உயிரிழந்துள்ளது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள யூடியூப் சேனல்கள் இது குறித்து பேசி கொண்டிருக்க தமிழக சினிமா பிரபலங்கள் வாயை திறக்காமல் உள்ளது பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
அரசியல் கட்சியினர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், எனக்கு அனுதாபமோ ஆறுதலோ கிடையாது, ஆத்திரம் தான் வருகிறது. குடித்து செத்துப்போனால் காசு தருகிறோம் என்று நீங்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறீர்கள். குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000, குடிச்சு செத்துப்போனா ரூ.10 லட்சமா என அவர் கடும் கோபத்தோடு கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து பலரும் இணையத்தில் இவருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். காரணம் திமுக அரசானது தான் என்ன செய்தாலும் சரி, அதை பணம் கொடுத்து மறைத்து விடுகிறது என்பதற்கு இந்த நிகழ்வே உதாரணம்.
Font size:
Print
Related Posts