Font size:
Print
ரொறன்ரோ St. Paul தொகுதியின் இடைத் தேர்தல் முடிவு நாங்கள் விரும்பிய வகையில் அமையவில்லை என பிரதமர் ஜஸ்டின் தெரிவித்தார்.
ரொறன்ரோ St. Paul தொகுதி இடைத் தேர்தலில் Conservative கட்சியின் வேட்பாளர் Don Stewart வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவுகள் இரண்டு பிரதான கட்சிகளிலும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் அவரது அரசியல் எதிர்காலம் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
இந்த இடைத் தேர்தல் தோல்வி Justin Trudeau அரசியல் எதிர்காலத்திற்கான சவாலாக அமையும் என கருதப்படுகிறது.
சிறுபான்மை லிபரல் அரசாங்கத்தின் ஆதரவை பிரதமர் தொடர்ந்து பெற்றிருப்பதாக துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland கூறினார்.
Related Posts