ஆசிரியர்கள் மீது தாக்குதல்! நாளையும் போராட்டம் தொடரும் என அறிவிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கொழும்பு லோட்டஸ் வீதியில் முன்னெடுக்கப்பட்ட தமது போராட்டத்தின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளையும் (27) ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையுடன், ஆசிரியர்-அதிபர்கள் ஒன்றிணைந்த குழு இன்று (26) கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய கோட்டை நீதவான் நீதிமன்றினால் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்து. (P)




Related Posts