நாடளாவிய ரீதியில் முடங்கியது கல்வி நடவடிக்கைகள்! கல்வி அமைச்சு கூறுவது என்ன?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அதிபர்கள், ஆசிரியர்களின் தொழிற்சங்க ஏற்பாட்டில் இரண்டாவது நாளாகவும் இன்று (27) சுகயீன விடுப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவியரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சுகயீன விடுமுறை போராட்டத்தினால் இன்றும் பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முடங்கியுள்ளன.

மாணவர்கள் வரவின்றி பாடசாலைகள் காணப்பட்டதுடன், பாடசாலைகளுக்கு அதிபர்கள், ஆசிரியர்கள் சமூகமளிக்காமையால் மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பி செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது.

எனினும், நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களின் போராட்டங்களுக்கு மத்தியிலும் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் இன்று வியாழக்கிழமை (27) வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (P)



Related Posts