அதிதி ஷங்கருக்கு ஜால்ரா அடிக்கும் நயன்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை நயன்தாரா பொதுவாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார், படங்களின் ப்ரோமோஷன் என்றால் கூட அவர் வரமாட்டார் என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் உள்ளது. ஆனால் தன்னுடைய கணவர் இயக்கினாலோ அல்லது தான் தயாரித்து இருந்தால் மட்டுமே சினிமா ப்ரோமோஷன்களில் கலந்து கொள்வார். இந்த நிலையில், நடிகை நயன்தாரா தனது நண்பரும், இயக்குனருமான விஷ்ணு வர்தனின் பட விழாவிற்கு சென்று கலந்துகொண்டு இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு ஆச்சிரியத்தை கொடுத்துள்ளது. இதுகுறித்து மேடையில் பேசிய நயன்தாரா, நான் பொதுவாக எந்த விழாவிலும் கலந்துகொள்ள மாட்டேன். ஆனால், இந்த விழா எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏனென்றால் இது என்னுடைய இயக்குனர் விஷ்ணுவின் படம். அதனால் தான் இந்த விழாவிற்கு வரமுடியாது என சொல்லவில்லை என கூறினார்.இப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். 

இந்த விழாவில் பேசிய நயன், அதிதி ஷங்கரை பாராட்டி தள்ளி இருப்பார். பொதுவாக எந்த ஒரு அறிமுக நடிகை என்றாலும் அவருக்கு அந்த அளவிற்கு பாராட்டும் வரவேற்பும் இருக்காது. ஆனால் அதிதிக்கு இயக்குனர் மகள் என்பதாலே படங்களும் வரவேற்பும் குவிகிறது. இதில் முக்கியமானது என்னவென்றால் ரசிகர்களுக்கு அதிதி சங்கரை பிடிக்கவில்லை, கிரிஞ்சாக இவர் செய்யும் சில செயல்களே இவரது நடிப்பை முழுவதுமாக பிடிக்காமல் போக காரணமாகி விட்டது. இன்னும் வெளிப்படையாக சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே நடிகர் நடிகைகள் கோல் ஊன்ற முடியும். அதனாலே இங்கு நெபோட்டிசம் இல்லாமல் உள்ளது. அந்த வகையில் ரசிகர்களை தவிர மற்ற எல்லா சினிமா பிரபலங்களும் அதிதி சங்கருக்கு பயங்கரமாக ஜால்ரா அடித்து வந்த நிலையில் அந்த லிஸ்டில் இப்போது நயன்தாராவும் சேர்ந்துவிட்டார்.

Related Posts