இஸ்ரேலைச் சேர்ந்த டிரைவர் ஒருவர், ஜெருசலேம் மற்றும் ரமல்லா இடையே பாலஸ்தீன கட்டுப்பாட்டில் உள்ள குவாலந்தியா நகருக்குள் தவறுதலாக நுழைந்துள்ளார். இஸ்ரேல் பதிவெண் கொண்ட வாகனத்தைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அந்த காரை தீயிட்டு கொளுத்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
ஒரு வீடியோவில், இஸ்ரேலியரின் காரை பாலஸ்தீனர்கள் துரத்தி துரத்தி கற்களை வீசி தாக்குவதும், அடுத்த வீடியோவில் கார் தீப்பற்றி எரிவதும் பதிவாகி உள்ளது.
பாலஸ்தீனர்களின் தாக்குதலில் இருந்து இஸ்ரேல் டிரைவர் தப்பிச் செல்ல முயன்றபோது, ராணுவ சோதனைச்சாவடி அருகே சாலையின் மையப்பகுதியில் உள்ள கான்கிரீட் தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானதாகவும், இதில் காயமடைந்த டிரைவர் ஜெருசலேமில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் இஸ்ரேல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வீடியோ இணைப்பு: https://twitter.com/i/status/1807168647070163241