அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் கோலிவுட்டில் நட்சத்திர ஜோடியாக இருக்கின்றனர். அவர்களது ஒரு போட்டோ வெளியானாலும் அது இணையத்தில் பெரிய அளவில் வைரல் ஆகிவிடும். மாதம் ஒருமுறையாவது அஜித் பற்றிய ஏதாவது புகைப்படம் அல்லது செய்தி வைரலாகி கொண்டே இருக்கும். அதில் நல்ல செய்தியும் இருக்கும் அதேபோல் வதந்திகளும் இருக்கும். ஆனால் அஜித் எதற்கும் செவி சாய்க்கமாட்டார். நடிகை ஷாலினி உடல்நலக்குறைவாக இருந்த நிலையில் அவருக்கு சென்னையில் நேற்று ஆபரேஷன் நடைபெற்று இருக்கிறது.
ஆனால் கணவர் அஜித் வரவில்லை. தான் சென்னைக்கு திரும்பி வந்துவிட்டால் விடாமுயற்சி ஷூட்டிங் நின்றுவிடும், தயாரிப்பாளருக்கு தான் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால் தான் அஜித் வரவில்லையாம். அசர்பைஜான் நாட்டுக்கு செல்லும் முன்பே சர்ஜரிக்கான ஏற்பாடுகளை செய்து முடித்த அஜித், நேற்று வீடியோ கால் மூலமாக டாக்டர்கள் உடன் பேசி இருந்தாராம். இதுவரை ஷாலினிக்கு என்ன பிரச்சனை என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மீடியாவிடம் இருந்து தள்ளி இருப்பதால் இதுவரை ஷாலினிக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை.