சிலாபம் – கொழும்பு வீதியில் பாரிய விபத்து – 25 பேர் காயம் (PHOTOS)

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் மாதம்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்தில் காயமடைந்த சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தேவாலய சந்தியிலிருந்து சிலாபம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த பஸ், வேகக் கட்டுப்பாட்டை இழந்து சிமேந்து ஏற்றிச் சென்ற லொறியொன்றுடன் மோதியுள்ளது.


விபத்தில் பஸ் முழுமையாக சேதமடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.  (P)


Related Posts