தன்னை கடித்த பாம்பை திருப்பி கடித்து கொன்ற நபர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பீகார் மாநிலம் நவாடாவில் ரயில்வே பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு சந்தோஷ் லோகர் (35) என்பவர் வேலை பார்த்து வருகிறார். சந்தோஷை கடந்த 2-ம் தேதி இரவு பாம்பு ஒன்று கடித்தது. அவர் முகாமில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென ஏதோ கடித்தது போன்று உணர்ந்ததால் பயந்து போய் எழுந்து பார்த்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது தெரிய வந்தது. இதனால் கோபத்தில் சந்தோஷ் தன்னை கடித்த பாம்பை பிடித்து கடித்தார். அவர் 3 முறை அதை கடித்ததார். இதனால் அந்த பாம்பு இறந்துவிட்டது. மேலும் பாம்பு கடித்தால் உடனடியாக அந்த பாம்பை பிடித்து 3 முறை கடிக்க வேண்டும் என்பது எங்கள் கிராமத்தின் வழக்கம் என்பதால் அப்படி செய்ததாக சந்தோஷ் விளக்கம் அளித்துள்ளார்.

பாடசாலையில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவு | Thedipaar News

Related Posts