விஷ வாயுவை சுவாசித்து பலர் உயிரிழப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சத்தீஸ்கர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் கிணற்றிலிருந்து நச்சுவாயுவை சுவாசித்து ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் கிணற்றில் விழுந்த பொருளைத் தேட இறங்கியவர் நச்சு வாயுவை சுவாசித்து உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற கிணற்றில் இறங்கிய மற்ற நான்கு பேரும் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பேரிடர் மீட்பு குழு வீரர்கள் கடுமையான போராட்டத்திற்கு பிறகு நான்கு பேரில் உடல்களையும் கிணற்றிலிருந்து வெளியே எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனா மெட்ரோவில் இருக்கை தகராறு | Thedipaar News

Related Posts