அக்னியுடன் சங்கமித்தார் சம்பந்தன் (PHOTOS)

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல், திருகோணமலையில் தகனம் செய்யப்பட்டது.

திருகோணமலையிலுள்ள அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்துரைத்தார்.


கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் நாட்டை பிளவுப்படுத்துவதற்கு இரா. சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 பிரிக்கப்படாத இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கே எப்போதும் அவர் அர்ப்பணிப்புடன் இருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அன்னாரது பூதவுடல் சற்று முன்னர் அக்னியுடன் சங்கமமானது. (P)

இரா சம்பந்தன் அக்கினியுடன் சங்கமம் | Thedipaar News

Related Posts