அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டு : சந்தேகிக்கப்படும் கார் கண்டுபிடிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட சந்தேகிக்கப்படும் கார் கடுவெல, கொரதொட்ட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (08) காலை 10 மணியளவில் அதுருகிரிய நகரில் மணிக்கூண்டு கால்வாய்க்கு அருகில் உள்ள அழகு நிலையம் திறப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல வர்த்தகரான 55 வயதான சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த மற்றும் 38 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் கொழும்பு 07 மற்றும் அதுருகிரிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாடகர் கே சுஜீவாவும் காயமடைந்தார், மேலும் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் காயமடைந்தனர்.

படுகாயமடைந்த ஒரு பெண்ணும் ஆண் ஒருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், ஏனைய பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் காரில் வந்து இரண்டு T56 துப்பாக்கிகளைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.


Related Posts