பட்டி தொட்டி எல்லாம் கலக்கிய நடிகை, இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை பானுபிரியா, தென்னிந்திய சினிமாவில் 80களில் கலக்கிய முக்கிய நடிகைகளில் ஒருவர். இப்போதும் இவர் நடித்து கொண்டு தான் உள்ளார். இவரது தங்கை என்ற அடையாளத்துடன் தெலுங்கு படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிஷாந்தி. பின் அதே ஆண்டில் நடிகர் ராமராஜன் நாயகனாக நடித்த எங்கு ஊரு பாட்டுக்காரன் படத்தில் நாயகியாக நடித்தார். இந்த நடிகை சினிமாவில் வந்த உடனே இவருக்கு வரவேற்பு குவிய ஆரம்பித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் இவரது எதார்த்தமான முக தோற்றமும் நடிப்பும்தான். இந்த படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே மற்றும் மதுர மரிக்கொழுந்து வாசம் போன்ற பாடல்கள் மூலம் நிஷாந்தி பட்டிதொட்டி எங்கும் கலக்கினார்.அதன்பின் மற்ற தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் அதிக கவனம் செலுத்தியதால் இவர் 10திற்கும் குறைவான தமிழ் படங்களிலேயே நடித்திருக்கிறார். பின்னர் பாலிவுட் நடிகர் சித்தார்த் ராய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார். 

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த 2004ம் ஆண்டு நிஷாந்தியின் கணவர் திடீரென உயிரிழந்தார். 54 வயதாகும் நிஷாந்தி இளம் நடிகைகளுக்கும் டப் கொடுக்கும் வகையில் நிறைய விதவிதமான போட்டோ ஷுட்களை நடத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். இப்போது பார்க்க இவர் தானா அந்த நடிகை? என்பது போல தோற்றம் அளித்தாலும் கூட இவரை இவரது ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டு இவரது தற்போதைய புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Related Posts