கனடாவில் திரும்பப் பெறப்படும் குளிர் பானங்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

னடாவில் சில குளிர் பானங்களில், லிஸ்டீரியா என்னும் நோய்க்கிருமியின் பாதிப்பு இருக்கலாம் என கருதப்படுவதால், அவை திரும்பப் பெறப்படுவதாக கனடா உணவு பரிசோதனை ஏஜன்சி தெரிவித்துள்ளது.

கனடா முழுவதிலுள்ள கடைகளுக்கு, Silk மற்றும் Great Value பிராண்டின் 15 வகை குளிர் பானங்களை விற்கவோ, விநியோகிக்கவோ, பரிமாறவோ வேண்டாம் என்று கனடா உணவு பரிசோதனை ஏஜன்சி அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் இந்த குளிர் பானங்களை வாங்கியவர்கள் அவற்றை உட்கொள்ளவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

எந்தெந்த குளிர் பானங்கள் திரும்பப் பெறப்படுகின்றன?

1.89 லிற்றர் அளவுள்ள, 2024, அக்டோபர் 24 best before திகதி கொண்ட கீழ்க்கண்ட குளிர்பானங்கள்:

 • Great Value Almond Beverage Unsweetened Original.
 • Great Value Almond Beverage Original.
 • Great Value Almond Beverage Vanilla.
 • Silk Almond and Coconut Unsweetened.
 • Silk Almond Original.
 • Silk Almond Dark Chocolate.
 • Silk Almond Unsweetened.
 • Silk Almond Unsweetened Vanilla.
 • Silk Coconut Original.

1.75 லிற்றர் அளவுள்ள, 2024, அக்டோபர் 24 best before திகதி கொண்ட கீழ்க்கண்ட குளிர்பானங்கள்:

 • Silk Oat Original.
 • Silk Oat Vanilla.
 • Silk Oat Dark Chocolate.
 • Silk Oat Unsweetened.
 • Silk Oat Unsweetened Vanilla.
 • Silk Almond and Cashew Unsweetened.
 • Silk Almond and Cashew Unsweetened Vanilla.

மற்றும், 1.89 லிற்றர் அளவுள்ள, 2024, செப்டம்பர் 27 best before திகதி கொண்ட Silk Coconut இனிப்பு ஏற்றப்படாத பானங்களும் திரும்பப் பெறப்படுகின்றன.


Related Posts