அத்துருகிரிய துப்பாக்கி சூடு l 10 லட்சம் ரூபாவுடன் டுபாயிலிருந்து வந்த உத்தரவு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

டுபாயிலிருந்து கிடைத்த குத்தகையொன்றுக்கு அமையவே, சுரேந்திர வசந்த பெரேராவை (கிளப் வசந்த) தனது பச்சை குத்தும் அழகு நிலைய திறப்பு விழாவிற்கு அழைத்ததாக, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை நடாத்திய போதே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, பச்சை குத்தும் அழகு நிலைய உரிமையாளரின் வங்கி கணக்கிற்கு, டுபாயிலிருந்து 10 லட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுரேந்திர வசந்த பெரேராவை (கிளப் வசந்த) கொலை செய்வதற்கு தான் உதவி புரிந்ததாக பச்சை குத்தும் அழகு நிலைய உரிமையாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில், கஞ்சிபானி இம்ரான் உள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். (P)


Related Posts