ஹைதராபாத்தில் உள்ள சுங்க வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக பணியாற்றி வருபவர் அனுசுய.
இவர் தனது பாலினத்தை ஆணாகஅண்மையில் மாற்றிக்கொண்டார்.
இதையடுத்து, தான் பணியாற்றும் அலுவலகத்தில் இதுவரை அனுசுயா என்ற பெயரில் பெண் அதிகாரியாக இருந்துவந்த தான் இனி அனுகதிர் சூரியா என்கிற ஆண் அதிகாரியாக செயல்பட அனைத்து ஆவணங்களிலும் தனதுபாலினத்தையும் பெயரையும் மாற்றிட ஒப்புதல் கோரி நிதியமைச்சகத்துக்குக் கோரிக்கை விடுத்தார்.அவரது கோரிக்கைக்கு நிதியமைச் சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
பாலின அடையாளம் என்பது தனி நபரின் விருப்பம் என்றது. அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அவர்களுக்கும் பொருந்தும், கண்ணியமாக வாழும்சூழலுக்கான உத்தரவாதம் அவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்என உத்தரவிட்டது. இந்த பின்னணியில் பாலின மாற்றத்தை நிதிஅமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய குடிமைப்பணி சேவை வரலாற்றில் முதல்முறையாக இவ்வாறு நடந்துள்ளது.