நேபாளத்தில் மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பயணிகள் பஸ்கள் அடித்துச் செல்லப்பட்டன.
பஸ்ஸில் இருந்த பயணிகளை தேடும் பணி நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் 63 பயணிகள் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் சிக்கிய ஒரு பேருந்து காத்மாண்டு சென்று கொண்டிருந்த ஏஞ்ஜெல் பேருந்து என்பதும், அதில் 24 பயணிகள் இருந்ததாகவும், மற்றொரு பேருந்து காத்மாண்டுவிலிருந்து ரௌதஹத் அருகே கௌர் பகுதிக்கு வந்துகொண்டிருந்ததாகவும், இதில் 41 பயணிகள் இருந்ததாகவும் ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது. காத்மாண்டு வந்துகொண்டிருந்த பேருந்தில் இருந்த 21 பயணிகளில் ஏழு பேர் இந்தியர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இந்த பேருந்து ஆற்றுக்குள் கவிழ்வதற்கு முன்பே, அதிலிருந்து குதித்து மூன்று பயணிகள் காயத்துடன் உயிர்தப்பியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பேருந்தில் பயணம் செய்த இந்தியர்களில் சந்தோஷ் தாகூர், சுரேந்திர சாஹ், அதித் மியான், சுனில், ஷானவாஸ் ஆலம், அன்சாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றொரு இந்தியரின் அடையாளம் தெரியவரவில்லை.