திகன கலவர விசாரணை அறிக்கை எங்கே?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


முஸ்லிம்மக்களுக்கு எதிரான திகன கலவரம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள போதும் அது தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப் படவில்லை.எனவே இது தொடர்பாக தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) விசேட கூற்றொன்றை முன்வைத்தே இவ்வாறு வலியுறுத்திய அவர் தொடர்ந்து கூறுகையில்,

முஸ்லிம்மக்களுக்கு எதிராக 2018இல் திகன கலவரம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு இது தொடர்பில் விசாணை மேற்கொண்டது. ஆனால் கலவரம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள போதும் அது தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப் படவில்லை.

எனவே அரசியலமைப்பு பேரவையின் தலைவர் என்ற வகையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த விசாரணை அறிக்கை தொடர்பாக தேடிப்பார்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார். (P)

இலங்கைக்கு பசுக்கள் இறக்குமதி செய்யும் இந்தியா – பாகிஸ்தான் | Thedipaar News

Related Posts