அம்பானி வீட்டு விசேஷத்தில் சீன் போடும் நம்ம நயன்தாரா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கோலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் நயன்தாரா சமீபத்தில் நடந்த அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்டு இருந்தார். அம்பானி வீட்டு கல்யாணத்தில் இந்திய பிரபலங்கள் மட்டுமா கலந்து கொண்டார்கள்? உலகத்தில் உள்ள எல்லா துறைகளிலும் உள்ள தலைசிறந்தவர்கள் எல்லோரும் ஒருங்கே இருந்த நிகழ்வு என்றால் அது அம்பானி வீட்டு கல்யாணத்தில் தான். இந்த வீட்டு விசேஷத்திற்கு நம்ம நயன்தாராவும் சென்றுள்ளார். பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்த உடனே அம்பானி வீட்டு கல்யாணத்திற்கு செல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். அப்படியானால் பார்த்து கொள்ளுங்கள் இவருக்கு உள்ள வரவேற்பை! 

 கணவர் விக்னேஷ் சிவன் உடன் அவர் திருமணத்திற்கு வந்த வீடியோவும் வெளியாகி வைரல் ஆகி இருந்தது.ஆனந்த் அம்பானி திருமணத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கிரிக்கெட் வீரர் தோணியை சந்தித்து அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.தோணியின் மனைவி சாக்ஷியும் போஸ் கொடுத்து இருக்கிறார்.இந்த போட்டோவை தனது வீட்டில் பெரிய பிரேம் போட்டு மாட்ட போவதாக விக்னேஷ் சிவன் தெரிவித்து இருக்கிறார்.

அனுரவின் பாதுகாப்பிற்காக  நவீன சிசிடிவி கமராக்கள் | Thedipaar News

Related Posts