இவர்களுக்கு எல்லாம் இனி ரேஷன் கார்டு இல்லை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆதார் அட்டை போலவே ரேஷன் கார்டு என்பது முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மலிவு விலை உணவு பொருள்களும் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே பெற முடியும். இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்குள் இ-கேஒய்சி செய்யாத பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கேஒய்சி சரி பார்ப்பும் அவசியமாகும். அனைத்து பொது விநியோகத் திட்ட விற்பனையாளர்களுக்கும் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் இ-கேஒய்சி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரேஷன் கார்டில் நடைபெறும் மோசடிகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உரிய நேரத்தில் கேஒய்சி சரிபார்ப்பு செய்யாத பயனாளிகளுக்கு ரேஷன் உதவிகள் கிடைக்காமல் போகலாம்

அம்பானி வீட்டு விசேஷத்தில் நடிகை, நடிகர்கள் | Thedipaar News

Related Posts