ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழு வசமானது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் அதிகாரம் நேற்று நள்ளிரவு (16) முதல் தேர்தல் ஆணைக்குழு வசமாகியுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் இந்த அதிகாரம் தம் வசமானதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.

இதன்படி, அரசியலமைப்புக்கு அமைய செப்டம்பர் 17ம் திகதிக்கும் அக்டோபர் 16ம் திகதிக்கும் இடைப்பட்ட திகதி ஒன்றில் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடாத்தப்படும் என ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த நிலையில், தேர்தலுக்கான திகதி அறிவிப்பு, வேட்பு மனுக் கோரல் உள்ளிட்ட ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து செயற்றிட்டங்களையும் முன்னெடுக்கும் அதிகாரம் நேற்று நள்ளிரவு முதல் தேர்தல் ஆணைக்குழு வசமாகியுள்ளது.  (P)

கண் பார்வை இழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்க வில்லை | Thedipaar News

Related Posts