அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதி திட்டம் தீட்டியிருந்தது குறித்து சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அமெரிக்காவுக்கு உளவுத் தகவல் கிடைத்ததாக சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அந்தச் செய்தியில், “ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அமெரிக்க அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் வந்துள்ளது. அதில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சதி குற்றச்சாட்டை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது ஆதாரமற்ற, ஈரானுக்கு களங்கம் விளைவிக்கும் குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளது.
அம்பானி வீட்டுத் திருமணத்தில் விருந்தினர்களுக்கு ரூ 2 கோடி கைக்கடிகாரம் பரிசு | Thedipaar News