கணவரை விவாகரத்து செய்தார் துபாய் இளவரசி ஷேகா மஹ்ரா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகளான ஹைகா மஹ்ரா, தனது இன்ஸ்டா பக்கத்தில், “அன்புள்ள கணவருக்கு, நீங்கள் வேறு சிலருடன் உறவில் இருப்பதால், உங்களை நான் விவாகரத்து செய்வதை இதன் மூலம் அறிவிக்கிறேன். 

நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன். உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி.” என்று தெரிவித்துள்ளார்.

ஷைக்கா மஹ்ரா-வுக்கும், அவரது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமுக்கும் கடந்த ஆண்டுதான் திருமணமானது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களே ஆகின்றன. இந்நிலையில், மஹ்ரா கணவரை விவாகரத்து செய்திருப்பது குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

6 இலட்சத்திற்கு மாம்பழம் ஏலம் | Thedipaar News

Related Posts