நாம் தமிழர் நிர்வாகி கொலைக்கு குடும்பப் பிரச்சினை காரணமா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியான பாலசுப்பிரமணியன் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு குடும்ப பிரச்சினை காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

சினிமா பாணியில் நடந்த இந்தக் கொலையைப் பார்த்துவிட்டு, சாலையில் நடைபயிற்சி சென்றவர்கள் தெறித்து ஓடினர். கொலைவெறிக் கும்பலிடம் வெட்டுப்பட்டு தெருவில் கிடந்த பாலசுப்பிரமணியனை அக்கம், பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது.

சம்பவம் தொடர்பாக பேசிய தல்லாகுளம் போலீஸார், “கொலையான பாலசுப்பிரமணியன் நாம் தமிழர் கட்சியில் செல்லூர் பகுதிச் செயலராக இருந்தார். தற்போது, வடக்குத் தொகுதி துணைச் செயலாளராக இருப்பதாக கூறுகின்றனர். இவர் மீது ஏற்கெனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. இவரது தம்பி பாண்டியனின் மகளை மகாலிங்கம் என்பவரது மகனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். 

அந்த வகையில் சில பிரச்சினை இருந்துள்ளது. இது தொடர்பாக பால சுப்பிரமணியனுக்கும், மகாலிங்கத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், மகாலிங்கம் தான் தனக்கு விசுவாசமான நான்கு பேரை வைத்து பாலசுப்பிரமணியனை தீர்த்துக் கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், அரசியல் உள்ளிட்ட வேறு காரணத்துக்காக அவர் கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரிக்கிறோம்” என்றனர்.

சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் | Thedipaar News

Related Posts